மதுரையில் பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வாழவந்தான் அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவுபடி இடிப்பு

0 27315

மதுரை மாவட்டம் இலங்கியேந்தலில் பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வாழவந்தான் அம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவுபடி இடிக்கப்பட்டது.

கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து சுமார் பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி கடந்த ஆண்டு கட்டிய இந்த அம்மன் கோயில், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் கூறி கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து கோவிலை இடிக்க கடந்த முறை பொதுப்பணித்துறை வந்த போது, பொதுமக்களும், இந்து முன்னணி அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், கோயிலை இடிக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசுடன் அங்கு சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. உதவியுடன் கோயிலை இடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments