அமெரிக்க வீரரிடம் முள்வேலி தாண்டி ஒப்படைக்கப்பட்ட ஆப்கான் குழந்தை சிகிச்சைக்குப் பின் தந்தையிடம் ஒப்படைப்பு

0 29450

காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரரிடம் முள்வேலி தாண்டி ஒப்படைக்கப்பட்ட ஆப்கான் குழந்தை சிகிச்சைக்குப் பின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக காபுல் விமான நிலையம் வந்த நபர் உடல்நலம் பாதிக்கப்பட்டத் தன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்குமாறு அமெரிக்க வீரர்களிடம் மன்றாடினார். விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முள் வேலிக்கு மேல்புறமாக அவர் குழந்தையை அமெரிக்க வீரர் பெற்றுக்கொள்ளும் கானொளி இணையத்தில் வைரல் ஆனது.

சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது குழந்தை எங்கு உள்ளது எனத் தெரியவில்லை என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானத் தாய்மார்கள் தாலிபான்களுக்கு அஞ்சி கைகுழந்தைகளை காபுல் விமான நிலையத்திற்குள் வீசி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments