தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3894

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உட்பட எஞ்சிய பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளைய தினமும், சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments