காபூலில் இருந்து 85 இந்தியர்கள் மீட்பு, மேலும் 250 பேரை மீட்க தயார் நிலையில் விமானப்படை

0 2959
காபூலில் இருந்து 85 இந்தியர்கள் மீட்பு, மேலும் 250 பேரை மீட்க தயார் நிலையில் விமானப்படை

ஆப்கன் தலைநகர் காபூலில் சிக்கியிருந்த இந்தியர்கள் மேலும் 85பேர் விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

தாலிபன்கள் காபூலை பிடித்த பிறகு தூதரக பணியாளர்கள் உள்ளிட்ட 120 பேர் முதலாவது விமானத்தில் கடந்த 16 ஆம் தேதி இந்தியா வந்தனர். இந்த நிலையில் விமானப்படையின் C-130J விமானத்தில் 85 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்கனின் பல நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து காபூலுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.  அத்துடன் வழியெங்கும் தாலிபன்களின் செக்போஸ்டுகள் உள்ளதால் அவர்களால் விமான நிலையத்திற்கு வருவதில் சிக்கல் உள்ளது.

இதனிடையே மேலும் 250 பேரை மீட்டு வருவதற்கு விமானப்படையின் சி-17 விமானம் காபூலுக்கு பறக்க தயாராக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments