ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கடத்தல் என தகவல்

0 4501

ஆப்கானிஸ்தான் தலைநகரில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்குப் பிறகு அவர்கள் விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ள நிலையில், காபூல் விமான நிலையம் செல்ல இருந்த இந்தியர்கள் உள்ளிட்ட 150 பேர் தாலிபான்களால் கடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு உடனடியாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் மறுத்து தெரிவித்தார்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த 150 இந்தியர்கள், ஆவண சரிபார்ப்புக்காக அருகில் உள்ள காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதுதொடர்பான விசாரணை முடிந்து காபூல் விமான நிலையத்திற்குள் பத்திரமாக வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments