தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணல் எடுத்துச்சென்ற 5 லாரிகள் பறிமுதல்

0 1839
தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாதுமணல் எடுத்துச்சென்ற 5 லாரிகள் பறிமுதல்

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவரால் சீல் வைக்கப்பட்டுள்ள குடோனில் இருந்து தாதுமணல் எடுத்துச் சென்றதாக விவி மினரல்ஸ் உரிமையாளர் மற்றும் 5 லாரி டிரைவர்கள் மீது  சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விவி மினரல்சுக்கு சொந்தமான தாதுமணல் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட சிப்காட் போலீசார், லாரி ஒன்றை மடக்கினர். முத்தையாபுரத்திலுள்ள விவி மினரல்ஸ் குடோனில் இருந்து சட்டவிரோதமாக தாதுமணல் ஏற்றிக்கொண்டு விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ஆலைக்கு சென்றதாக கூறப்படும் அந்த லாரியை பிடித்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 டன் தாதுமணலை பறிமுதல் செய்தனர்.

விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ஆலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏற்கெனவே 4 லாரிகள் அங்கு தாதுமணல் ஏற்றிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments