ஓணம் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

0 1817
ஓணம் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

 குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மலையாள மக்களுக்கு  ஓணம் வாழ்த்துகளை தெரிவிப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்தில்,  நேரான எண்ணங்கள், துடிப்பு, சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நன்றாக வாழ தாம் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஓணம், அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை தரட்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments