இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு...மார்க்கெட்டுகள், கடைகளில் மக்கள் கூட்டம் முண்டியடிப்பு

0 2597
இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு...மார்க்கெட்டுகள், கடைகளில் மக்கள் கூட்டம் முண்டியடிப்பு

இலங்கையில் 10 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமல்படுத்தி உள்ளார்.

கடந்த புதன்கிழமை ஒரேநாளில் 187 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், வரும் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாகவும், அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்கள் நகை அடகு கடைகள், மளிகை கடைகள், காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகளில் முண்டியடித்து பொருட்கள் வாங்குவதில் மும்முரம் காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments