எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை- உச்சநீதிமன்றம்

0 2770
எல்லா வழக்குகளிலும் கைது நடவடிக்கை கட்டாயமில்லை- உச்சநீதிமன்றம்

எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கைது நடவடிக்கை ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டால் அது சம்பந்தப்பட்ட மனிதரின் கௌரவத்துக்கும் தன்மானத்துக்கும் இழுக்காகி விடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டம் கைது செய்வதை அனுமதிப்பதால் அரசு அந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்தி ஒருவரின் சுதந்திரத்தை நசுக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொடிய குற்றங்களுக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்ல வாய்ப்பிருக்கும் வழக்குகளிலும் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments