ஆப்கானிஸ்தானில் சம உரிமை வேண்டி பதாகைகளுடன் பெண்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

0 1507
ஆப்கானிஸ்தானில் சம உரிமை வேண்டி பதாகைகளுடன் பெண்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பில் தங்கள் சம உரிமை வேண்டும் என்றும் ஜனநாயக அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காபூல் நகர வீதிகளில் பதாகைகளுடன் திரண்ட பெண்கள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிய தங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பெண் சுதந்திரத்தை பறிக்க தாலிபான்கள் முயற்சிக்க கூடாது என கோஷம் எழுப்பினர்.

மேலும் நாட்டில் ஜனநாயக அரசின் ஆட்சி நடக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments