ஆப்கானில் இருந்து அமெரிக்கர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் -ஜோ பைடன்

0 1578
ஆப்கானில் இருந்து அமெரிக்கர்கள் அனைவரையும் வெளியேற்றுவோம் -ஜோ பைடன்

ஆப்கானில் இருந்து அமெரிக்கர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உறுதியாக இருப்பதாக அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.

இதுமிகவும் ஆபத்தான பணி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.ஆப்கானில் என்ன நடக்கும் என்பது எந்த வித நிச்சயத்தன்மையும் இல்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்கர்கள் வெளியேற்றம் தொடர்பாக பேசிய ஜோ பைடன், தாலிபன் தீவிரவாதத்தை விட கூடுதலான தீவிரவாத ஆபத்து வேறு சில நாடுகளில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.  

தீவிரவாதம் தலைதூக்கினால் மீண்டும் காபூலில் புகுந்து தாக்குதல் தொடர்வோம் என்றும் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments