தெலுங்கானாவில் கள்ள நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதற்காக எல்லை பாதுகாப்புப் படை ஊழியர் உட்பட 5 பேர் கைது

0 1556

தெலுங்கானாவில் கள்ள நோட்டுகளை அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டதற்காக எல்லை பாதுகாப்புப் படை ஊழியர் உட்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஐதராபாத் சித்திப்பேட்டையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சந்தோஷ்குமாரும், அவர் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து 500 ரூபாய், 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்டுப் புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு படை ஊழியரான சீனிவாசன் என்பவர் கமிஷன் அடிப்படையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது பற்றித் தகவல் அறிந்த காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 16 இலட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், மடிக்கணினி, பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments