பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

0 7234

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும்  இக்கூட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு, சுற்றுலா தலங்களுக்கு முழுமையான அனுமதி குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments