38 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 6 பேர்... 20 நிமிடத்தில் குற்றவாளிகளை சிக்க வைத்த மோப்ப நாய்.!

0 5141

குஜராத் மாநிலம் வடோதராவில் 38 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 6 பேரை 20 நிமிடங்களில் போலீஸ் மோப்ப நாய் அடையாளம் காட்டியது.

18 மாதமே ஆன டோபர்மேன் இனத்தைச் சேர்ந்த பெண் நாய் ஜாவா, குற்றம் நடந்த இடத்திற்கு மோப்பம் பிடிக்க கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த பெண்ணின் துப்பட்டாவையும் ஒரு பாட்டிலையும் மோப்பம் பிடித்து வடக்கு நோக்கி ஓடத் தொடங்கியது ஜாவா.

காவலர்கள் பின்தொடர வயல்களைக் கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ஜாவா, அகமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் ரயில் பாதையில் இருந்த 5 கூடாரங்களில் ஒரு கூடாரத்தை அடைந்தது. அங்கிருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments