’வாலி’ மாமனார் கதையை முடித்த ”கண்ணகி” மருமகள்..! சாப்பாட்டில் விஷம் வைத்தார்

0 6153
’வாலி’ மாமனார் கதையை முடித்த ”கண்ணகி” மருமகள்..! சாப்பாட்டில் விஷம் வைத்தார்

முதுகுளத்தூர் அருகே திருமணமாகி 4 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், மருமகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த மாமனாருக்கு, உணவில்  விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோபா ராஜனுக்கும், கனிமொழி என்ற பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதை பயன்படுத்திக் கொண்ட மாமனார் முருகேசன், தனது மகன் வீட்டில் இல்லாத நேரங்களில்
மருமகள் கனிமொழிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மாமனார் முருகேசனின் சீண்டல்கள் குறித்து, கணவர் வினோபா ராஜனிடம் கனிமொழி பலமுறை கூறியுள்ளார். தனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று கூறி வினோபா ராஜன் தட்டிக் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாருக்கு தக்க பாடம் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளார் கனிமொழி.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 31 தேதி இரவு உணவிற்கு அமர்ந்த முருகேசன், மருமகளை அழைத்து தனக்கு சாப்பாடு பரிமாறும்படி கூறியுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி குழம்பில் எலிபேஸ்ட் மற்றும் குருணை மருந்து இரண்டையும் கலந்து பரிமாறியதாக கூறப்படுகின்றது. அதனை சாப்பிட்ட மாமனார் முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டுள்ளார். அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1 ஆம் தேதி முருகேசன் உயிரிழந்தார்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் முருகேசன் உயிரிழந்தது குடும்பத்தில் யாருக்கும் தெரியாததால், உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் கொலை செய்ததை யாரிடமும் தெரிவிக்காமல் மருமகளும் மறைத்துள்ளார்.

ஏற்கனவே குழந்தையில்லாமல் மன அழுத்தத்தில் இருந்த மருமகள் கனிமொழி, தனது கையால் உணவில் விஷம் வைத்து மாமனாரை கொலை செய்ததை மறைக்க இயலாமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

உணவில் விஷம் வைத்ததை மனம் ஒப்புக் கொள்ளாத நிலையில் வியாழக்கிழமை கனிமொழி சரண் அடைந்தார். கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளைப் போன்று மருமகளைக் கருதவேண்டிய மாமனார், சபல புத்தியோடு நடந்துகொண்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments