வரவேற்புப் பணிக்கு என அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் ; ஈவண்ட் மேனேஜர் கைது

0 3835
வரவேற்புப் பணிக்கு என அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம் ; ஈவண்ட் மேனேஜர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்புப் பணிக்கு என்று இளம் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஈவண்ட் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளான்.

ராஜா என்ற அந்த நபரை தனியாக அழைத்துச் சென்ற ஒரு கும்பல், பணம், நகையைப் பறித்ததுடன், பெண்களைக் கொண்டு அடிக்கவைத்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 பெண்களை வைத்து அந்த கும்பல் ராஜாவின் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகாரளித்தனர்.

வரவேற்புப் பணிக்கு என குடும்பப் பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments