தடை செய்யப்பட்ட தாது மணல் விவகாரம் ; விவி டைட்டானியம் தொழிற்சாலைக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு

0 2037
விவி டைட்டானியம் தொழிற்சாலைக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு

தூத்துக்குடி விவி டைட்டானியம் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட தாது மணல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவி மினரல் நிறுவனத்துக்குச் சொந்தமான முத்தையாபுரம் குடோன் கடந்த 2013ஆம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியரால் மூடப்பட்டது.

அந்த குடோனிலிருந்து தாதுமணலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிப்காட்டிலுள்ள விவி டைட்டானியம் பிக்மென்ஸ் நிறுவனத்திற்குச் செல்வதாகக் கிடைத்த தகவலின்படி 9 டன் தாதுமணலுடன் வந்த லாரியை போலீசார் மடக்கினர். பின்னர் புவியியல் துறை அதிகாரி சுகிதா ரஹீமா நிறுவனத்துக்குள் சென்று அங்கு நின்றிருந்த லாரியிலிருந்த தாது மணலை ஆய்வு செய்தார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலைக்குள் ஆய்வு செய்தனர். இதனிடையே மத்திய அரசின் முறையான அனுமதி பெற்றே தாதுமணல் ஏற்றப்பட்டு வந்ததாக நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments