விவி டைட்டானியம் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு-தடை செய்யப்பட்ட தாது மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

0 2323

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட தாது மணல் ஏற்றி வந்ததாகக் கூறப்படும் விவி டைட்டானியம் தொழிற்சாலைக்குச் சொந்தமான லாரியை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடல் மண்ணில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தாது மணலை பதுக்கி வைக்கவோ  ஏற்றுமதி செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி “விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ்” தொழிற்சாலைக்கு 9 டன் தடை செய்யப்பட்ட தாது மணலை ஏற்றிச் சென்றதாக லாரி ஒன்றை சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ஆலைக்குள் மேலும் சில லாரிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட தாது மணல் இருப்பதாகக் கிடைத்த தகவலை அறிந்து புவியியல் துறை அதிகாரி சுகிதா ரஹீமா அங்கு சென்றார். ஆலைக்குள் நின்றிருந்த லாரி மீது ஏறி தாது மணல் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்.

முறையான அனுமதி பெற்றே தாது மணலை கொண்டு வந்ததாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments