புகாரளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

0 2535

புதுச்சேரியில் காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லாஸ்பேட்டையைச் சேர்ந்த கௌரி என்ற பெண், தனது கணவர் தன் நடத்தை மீது சந்தேகம் கொண்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் சண்முகம் என்பவர் அப்பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்டுகிறது. இது தொடர்பாக மாவட்டக் காவல்துறையிடம் புகாரளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, காவலர் சண்முகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைவர் கிருஷ்ணய்யா உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments