தாலிபான் அமைப்பின் மேல்மட்ட தலைவர்களில் ஒருவரான ஷெர் முகமது அப்பாஸ் இந்திய ராணுவக் கழகத்தில் பயின்றவர் என தகவல்

0 2483
ஆப்கன் ராணுவத்தில் இருந்தபோது இந்தியாவில் பயிற்சி பெற்றவர் என தகவல்

தாலிபான் அமைப்பின் மேல்மட்ட தலைவர்களில் ஒருவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்தானிக்சாய் உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கழகத்தில் 1970களில் பயின்றவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய அவர், இந்தோ-ஆப்கன் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், டேராடூன் இந்திய ராணுவக் கழகத்தில் பயிற்சி பெற்றுள்ளார். அப்பாஸ் ஸ்தானிக்சாய் ஒரு சராசரி ஆப்கன் வீரர் என்றும், இந்தியாவில் இருந்ததை மிகவும் விரும்பினார் என்றும், அவருடன் பயின்ற முன்னாள் ராணுவ அதிகாரியான சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

ஆப்கன் ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் ஸ்தானிக்சாய், அதிலிருந்து விலகி, தங்கள் நாட்டை ஆக்கிரமித்த சோவியத் படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக, தாலிபான்களின் மிக நெருக்கமான அமைப்பான ஹர்கத் இ இன்குலாப் என்ற இயக்கத்தில் சேர்ந்துள்ளார். 1996ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது வெளியுறவுத்துறை இணையமைச்சராக அப்பாஸ் ஸ்தானிக்சாய் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments