பாகிஸ்தான் பிடியில் தாலிபான் தலைவர்?

0 4775

தாலிபான் இயக்கத் தலைவர் ஹைபதுல்லா அகுண்ட்சாதா பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கக் கூடும் என வெளிநாட்டு உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2016ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்போதைய தாலிபான் தலைவர் அக்தர் மன்சூர் அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ஹைபதுல்லா அகுண்ட்சாதா தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரைக் கடந்த ஆறு மாதங்களாகப் பார்க்கவில்லை எனத் தாலிபான் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கக்கூடும் என வெளிநாட்டு உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments