மெஸ்ஸி பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை ரூ.7.5கோடிக்கு ஏலம் விட்ட நபர்

0 5052

பார்சிலோனா அணியில் இருந்து விடைபெறும் போது, நட்சத்திர கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை ஏழரை கோடி ரூபாய்க்கு நபர் ஒருவர் ஏலம் விட்டுள்ளார்.

2004 முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அண்மையில் அந்த அணியில் இருந்து வெளியேறினார்.

பிரிவு உபசார விழாவில், மனமுடைந்து பேசிய மெஸ்ஸி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கையில் டிஷ்யூ பேப்பரை வைத்து கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஷ்யூ பேப்பரை யாரோ ஒருவர் எடுத்துச்சென்று, அதில் மெஸ்ஸியின் டி.என்.ஏ. இருப்பதாகவும், அதைக் கொண்டு அவரைப் போன்ற திறமை வாய்ந்த இன்னொரு கால்பந்து வீரரை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் எனக் கூறி சுமார் ஏழரை கோடி ரூபாய்க்கு இணையத்தில் ஏலத்தில் விட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments