2 இந்திய தூதரகங்களில் புகுந்து தாலிபான்கள் சூறை..கார்களையும் எடுத்துச் சென்றதாக தகவல்..!

0 3700
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரங்களை சூறையாடி, கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரங்களை சூறையாடி, கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹீரட், ஜலாலாபாத், மஷார்-இ-ஷெரீஃப் நகரகங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது.

காந்தஹார் மற்றும் ஹீரட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புகுந்த தாலிபான்கள் ஆவணங்களை தேடி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தூதரக வளாகங்களில்  அதிகாரிகள் பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்டிருந்த கார்களை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments