போலி நிறுவனங்களிடம் ஏமாறுவதைத் தடுக்க,இளைஞர்களுக்குச் சொந்த வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்- அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1894

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாறுவதைத் தடுக்க, இளைஞர்களுக்குச் சொந்த வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் படி 2017ஆம் ஆண்டு நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் வந்தது தொடர்பாகத் தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்தது. இது குறித்த விசாரணையில், வேலைவாங்கித் தருவதாகக் கூறி 80 பேரிடம் 9 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாகச் சித்ரா என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதாப், ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா சூழலில் போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளதாகவும், ஏமாந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments