மகாராஷ்டிரா:நெடுஞ்சாலைத் திட்டப் பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து-12 பேர் பரிதாப பலி

0 2461

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் நெடுஞ்சாலைத் திட்டப் பணிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை - நாக்பூர் ஆறுவழிச்சாலைத் திட்டப்பணிக்குத் தொழிலாளர்கள் 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி புல்தானா மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments