தீவிரவாதிகள் அமைக்கும் சாம்ராஜ்யம் நிரந்தரமானது இல்லை-பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

0 3145

தீவிரவாதிகள் அமைக்கும் சாம்ராஜ்யம் நிரந்தமானது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள, புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் பல்வேறு திட்டப்பணிகளை வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, ஆன்மீக சுற்றுலாவில் புதிய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டார். சோம்நாத் கோவில் பல நூற்றாண்டுகளில் பல முறை தாக்கப்பட்டிருப்பதாகவும், விக்கிரகங்களை அழிக்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் கூறிய பிரதமர், அந்த சோதனைகளை எல்லாம் தாங்கி கோவில் கம்பீரமாக நிற்பது, நமக்கு தன்னம்பிக்கை அளிப்பதாகக் கூறினார்.

அழிவு சக்திகளும், பயங்கரத்தின் மூலம் சாம்ராஜ்யங்களை உருவாக்க நினைப்பவர்களும் சில காலம் ஆதிக்கத்தில் இருக்கலாம் என்றாலும், அது நிரந்தரம் அல்ல என கூறிய பிரதமர், மனிதத்தன்மையை எப்போதும் ஒடுக்கி விட முடியாது என்றார்.

இந்தியாவின் ஒற்றுமை பற்றிப் பேசும்போது, அது புவிவியல் மற்றும் கொள்கை சார்ந்தது மட்டுமல்ல, நமது வரலாற்றின் பாரம்பரியத்தில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி என அவர் கூறினார். நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோவில் கட்டப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments