தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

0 2140

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 3 நாட்களுக்கும் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments