2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை-கணக்கில் மட்டுமே இருப்பதாகவும் இருப்பில் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

0 3825

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2லட்சத்து 80ஆயிரம் டன் நிலக்கரியை காணவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் பேசிய அவர், நிலக்கரி கணக்கீட்டில் பதிவேட்டில் உள்ள கணக்கிற்கும், இருப்பிற்கும் எப்படி வித்தியாசம் உள்ளது என்பதை முழுவதுமாக கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிமுகவின் நிர்வாக சீர்கேடால், மின் வாரியத்திற்கு ஒரு லட்சத்து 59ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதோடு, 15ஆயிரம் கோடியில் இருந்து 17ஆயிரம் கோடி ரூபாய் வரை வட்டி கட்ட வேண்டிய நிலை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments