ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 1792

தமிழகத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பிற்கும், ஈகை பண்பிற்கும் அடையாளமாக ஓணம் திருநாள் விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சார்பில் இபிஎஸ், ஓபிஸ் கூட்டாக விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்க வேண்டும் என்கிற உயரிய கருத்தினை கொண்டு,மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது ஓணம் திருநாள் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் ஓணம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments