ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

0 2742
ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், ஆலோசனைக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் நாளைய கூட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு, சுற்றுலா தலங்களுக்கு முழுமையான அனுமதி குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments