ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட இந்திய தூதரகங்களில் புகுந்து தாலிபான்கள் சோதனையிட்டதாக தகவல்

0 4113

ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட இந்திய தூதரகங்களில் புகுந்து தாலிபான்கள் சோதனையிட்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹீரட், ஜலாலாபாத், மஷார்-இ-ஷெரீஃப் நகரகங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. காந்தஹார் மற்றும் ஹீரட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு தாலிபான்கள் சோதனையிட்டுள்ளனர்.

காந்தஹாரில் பூட்டுகளை உடைத்து தாலிபான்கள் தூதரக அலுவலகத்தில் புகுந்ததாகவும், ஆவணங்கள் ஏதேனும் சிக்குகிறதா என தேடியதுடன், அங்கு தூதரக அதிகாரிகள் பயன்பாட்டுக்காக நிறுத்தப்பட்டிருந்த கார்களை எடுத்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, ஹீரட் நகரில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த கார்களை தாலிபான்கள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments