நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்சின் உடல்நிலையில் முன்னேற்றம்

0 1964
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்சின் உடல்நிலையில் முன்னேற்றம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் இருந்த அவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு இதயக்கோளாறு இருப்பது தெரியவந்தது. கவலைக்கிடமான நிலைக்கு சென்ற கிறிஸ் கெய்ர்ன்ஸ், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments