ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை காக்கத் துடிக்கும் தாய்மார்கள், கண்கலங்கச் செய்யும் வீடியோ

0 3288
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை காக்கத் துடிக்கும் தாய்மார்கள், கண்கலங்கச் செய்யும் வீடியோ

தாலிபான்களின் சித்ரவதையில் இருந்து, ஆப்கான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காக்கத் துடித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

காபூல் விமான நிலையம் முன் இரவு பகலாக காத்திருக்கும் மக்கள் ஏதாவது ஒரு வழியாக ஆப்கானை விட்டு செல்ல முடியாதா என்ற ஏக்கத்தில் பரிதவித்து நிற்கின்றனர்.

தாலிபான்களிடம் இருந்து எப்படியும் தப்ப முடியாது என்ற நிலையில், தங்கள் குழந்தைகளையாவது பாதுகாத்துவிடலாம் என எண்ணிய தாய்மார்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தினரிடம் தங்கள் பிஞ்சுக் குழந்தைகளைக் கொடுத்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளனர்.

அவ்வாறு அழைத்துச் செல்ல தங்களுக்கு உரிமையில்லை என வீரர்கள் கண்கலங்கியவாறு தாய்மார்களிடமே குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments