நீரவ் மோடியை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த ஏற்பாடு

0 321

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோடியை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. 

நீரவ் மோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் அவரை நாடு கடத்த முறைப்படி கோரிக்கை விடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, இதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் காலவரையின்றி தங்கி இருக்கும் அனுமதியை பெற்றிருந்தால் நீரவ் மோடியை நாடு கடத்துவதாகவும், இல்லாவிட்டால் முறையற்ற ஆவணங்களை பயன்படுத்தி இங்கிலாந்தில் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்து ஒப்படைப்பதாகவும் அந்நாட்டு உள்துறை கூறியுள்ளது. இதையடுத்து, முறையான ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளதாக இங்கிலாந்தின் விசாரணை முகமைக்கு சிபிஐ  தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments