தீவிரவாதத்திற்கு ஆதரவான நாடுகளுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

0 3040

தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் உள்ளபோது, வேறு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார்.

ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியாதாரங்கள் தொடர்வதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தீவிரவாதத்தை ஒடுக்க எட்டு அம்ச திட்டங்களையும் ஜெய்சங்கர் அறிவித்தார். தீவிரவாதத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடாது, நியாயப்படுத்தக் கூடாது நிதி ஆதாரங்களை வழங்கக்கூடாது,  உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments