தொடர்ந்து வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி.. கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்

0 2701
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக  7 கோடி ரூபாய் அளவில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்க கூடாது என தெரிவித்தார். மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இங்கு  விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி கூறினார்.

தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments