திருட்டுத்தனமாக பாலை குடிக்கும் போது சொம்பிற்குள் தலை மாட்டிக்கொண்ட பூனை..

0 3035
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருட்டுத்தனமாக பாலை குடிக்கும் போது சொம்பிற்குள் தலை மாட்டிக்கொண்ட பூனையை இளைஞர் ஒருவர் விடுவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருட்டுத்தனமாக பாலை குடிக்கும் போது சொம்பிற்குள் தலை மாட்டிக்கொண்ட பூனையை இளைஞர் ஒருவர் விடுவித்தார். 

புளியம்பட்டி கென்டியான்வளவு பகுதியை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் பசுமாட்டில் கறந்த பாலை சிறிய சொம்பில் ஊற்றி வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில், அங்கு வந்த ஒரு பூனை பாலை குடித்த போது, அதன் தலை சொம்பிற்குள் மாட்டிக்கொண்டது. இதை பார்த்த சரவணன் பால் சொம்புடன் அங்கும் இங்கும் ஓடிய பூனையை பிடித்து சொம்பை உருவி பூனையை விடுவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments