குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு தாம் முதன்முறையாக வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை..

0 3749
இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவ, தாம் முதன்முறையாக வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரேஜிக் (Maria Andrejczyk) ஏலம் விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வீராங்கனை மரியா, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், அதே நாட்டைச் சேர்ந்த பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா என்ற ஆண் குழந்தையின் இருதய அறுவைசிகிச்சைக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் தேவைப்படுவதையும், அந்தத் தொகையை ஈட்ட முடியாமல் அவரது பெற்றோர் சமூக வலைதளங்களில் உதவி கோரியதையும் அறிந்த மரியா ஆண்ட்ரேஜிக், தாம் வாங்கிய பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.

அவரது பதக்கம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதை அறிந்த ஏல நிறுவனம் மரியாவின் பதக்கத்தை அவரிடமே திருப்பி வழங்க முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments