'ஆயிரத்தில் ஒருவன்' ரூ.32 கோடி பட்ஜெட் படம் என பொய் கூறியது ஏன்? - இயக்குநர் செல்வராகவன் விளக்கம்

0 4615
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துவிட்டு, மெகா பட்ஜெட் படம் என நம்ப வைப்பதற்காக 32 கோடி ரூபாய் என பொய் சொன்னதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்துவிட்டு, மெகா பட்ஜெட் படம் என நம்ப வைப்பதற்காக 32 கோடி ரூபாய் என பொய் சொன்னதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

கடந்த 2010 ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் திரைக்கு வந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

தற்போது, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள செல்வராகவன், முதல் பாகத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி ரூபாய் என்றும், மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி படமாக அறிவிக்க முடிவு செய்ததாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால், படம் பட்ஜெட் தொகையை வசூலித்தாலும் அது சராசரி வசூலாக கருதப்பட்டதாகவும், எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்பதை இதன் மூலம் கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments