குடிமராமத்து என்ற பெயரில் பனைமரங்களை காலி செய்து விட்டனர் - அமைச்சர் குற்றச்சாட்டு

0 1965
கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து என்ற பெயரில் பனைமரங்களை காலி செய்து விட்டதாக, வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து என்ற பெயரில் பனைமரங்களை காலி செய்து விட்டதாக, வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.

வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போது,  ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் வேளாண் துறைக்கு வழங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் போது அமைதியாக இருந்த சபாநாயகர், பனை மரம் குறித்து பேசியபோது வெளியிட்ட அறிவிப்பு அவரது ஆர்வத்தை காட்டுவதாகக் கூறி பேரவையில் துரைமுருகன் சிரிப்பலை ஏற்படுத்தினார்.

மரவள்ளிக் கிழங்கு மாவுப் பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2000 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு வழங்க சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments