சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த கேரளாவில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி..

0 4224
கேரளாவில் பணியாற்றி வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

கேரளாவில் பணியாற்றி வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

வாழப்பாடியை அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான தர்மலாஸ்ரீ, கேரள மாநிலம் ஆலப்புழாவில் சப் கலெக்டராக பணியாற்றி வரும் நிலையில், அவரது கணவர் தாமரைக்கண்ணன் சென்னையில் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில், கருவுற்றிருந்த தர்மலாஸ்ரீ பிரசவத்திற்காக விடுப்பு எடுத்து கரடிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை மீறி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த 11ஆம் தேதி சேர்ந்த அவருக்கு, நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments