மத்திய அரசு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 2677
பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைக்கப்பட்டதால் நேரடியாக மக்களுக்கு பலன்

பெட்ரோல் மீதான வரியை தமிழக அரசு 3 ரூபாய் குறைத்திருப்பதால், மத்திய அரசுக்கு வருமானம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதற்காக மத்திய அரசு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், பெட்ரோல் மீதான வரியை தமிழ்நாடு அரசு 3 ரூபாய் குறைத்த பிறகு, பயன்பாடு அதிகரித்து நாள் ஒன்றுக்கு 11.29 லட்சம் லிட்டர் அளவிற்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, மத்திய அரசுக்கு 3 கோடியே 55 லட்சம் ரூபாயும், ஆண்டுக்கு சுமார் 1200 கோடி ரூபாயும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments