மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் - கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1616
மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும்

 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதர வன்முறை செயல்கள் தொடர்பான குற்ற வழக்குகளை கொல்கத்தா போலீஸ் ஆணையர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு வாரங்களுக்குள் இந்த இரண்டு விசாரணைகளின் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தால் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments