காவலரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையன்.. 9 சவரன் செயின் பறிப்பு

0 3444
சென்னையில் காக்கி சீருடையில் இருந்த பெண் போலீசிடம் இருந்து செயின் பறிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் காக்கி சீருடையில் இருந்த பெண் போலீசிடம் இருந்து செயின் பறிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேத்துப்பட்டை சேர்ந்த முதல்நிலை காவலரான கவிதா, தன்னுடன் பணிபுரியும் விஜயகுமார் என்பவருடன் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு பாதுகாப்பு பணிக்காக பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

இருவரும் காக்கி சீருடையில் சென்று கொண்டிருந்த நிலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், பின்னால் அமர்ந்திருந்த கவிதாவின் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலிச் செயின் உட்பட 2 செயின்களை பறித்துக் கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த காவலர்கள் இருவரும் செயின்பறிப்பு திருடர்களை விரட்டிச் செல்வதற்குள் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments