சிங்கபட்டி ஜமீன் குறித்து அவதூறு என வழக்கு: இயக்குநர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவு

0 2940

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவன் இவன் திரைப்படத்தில் அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்தரித்ததாக இயக்குனர் பாலா மற்றும் ஆர்யா மீது சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சிங்கராத் மஜன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று  வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபிக்காததால் இயக்குனர் பாலாவை வழக்கிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments