திமுக பிரமுகரை நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொன்ற கும்பல் - சிசிடிவி வெளியீடு

0 3658

சென்னையில் தேடப்பட்டு வந்த ரவுடியின் இருப்பிடத்தை போலீசாருக்கு காட்டிக் கொடுத்ததாக, திமுக பிரமுகரை நடுரோட்டில் வைத்து சிலர் வெட்டிக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திமுக வார்டு அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த சம்பத்குமார் நேற்றிரவு பைக்கில் அண்ணாநகர் காவல்நிலையத்தை கடந்து சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த கும்பல் அவரை தாக்கி விழ வைத்தனர். பின்னர், ஆட்டோ ஒன்றில் வந்த கும்பலும் சேர்ந்துகொண்டு போக்குவரத்து மிகுந்த அந்த சாலையில்சம்பத்குமாரை கொடூரமாக வெட்டி சிதைத்துக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

கொலை தொடர்பாக டொக்கா ஹரிகுமார், பிளாக்பெரி மோகனவேல், ஆடியோ நவீன், ஜங்குபார் ஸ்ரீதர் ஆகிய 4 பேரும் சரணடைந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட சம்பத்குமார் போலீஸ் இன்ஃபார்மராக இருந்தாகவும், கடந்த ஆண்டு தனது வீட்டுக்கு அருகே விநாயகம் என்பவரின் வீட்டில் லெனின் என்ற ரவுடி பதுங்கி இருந்ததை போலீசுக்கு காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது சரணடைந்துள்ள நவீன் என்பவன் விநாயகத்தின் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வரும் நிலையில் விநாயகம் குடும்பத்தினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments