கொடநாடு விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகவே தான் வெளியேறினார்கள் - சபாநாயகர்

0 2478
சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகவே தான் வெளியேறியதாகவும், தாங்கள் வெளியேற்றவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகவே தான் வெளியேறியதாகவும், தாங்கள் வெளியேற்றவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொடநாடு விவகாரம் குறித்து பேசிய போது பேரவையில் இருந்து அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து பேசிய சபாநாயகர், அனுமதி பெறாமல் பேச முற்பட்ட போது எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்சனையை அவையில் எழுப்பக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் எதிர்கட்சித்தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், பேரவை விதிகளின் படி ஏதேனும் ஒன்றை காட்சிப்பொருளாக காண்பிக்க வேண்டும் என்றால் சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில், எந்த அனுமதி வாங்காமல் அதிமுகவினர் பதாகைகளை தூக்கி காண்பித்ததாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments