ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது - தாலிபன்கள் அறிவிப்பு

0 5975
ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தாலிபன்கள் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தாலிபன்கள் கூறியுள்ளனர்.

1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாலிபன்களின் உச்சபட்ச தலைவரான ஹைபதுல்லா அகுந்த்சாதா (Haibatullah Akhundzada) ஆட்சிக்கு ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

அதிபர் பதிவியைவிடவும் கூடுதலான அதிகாரம் அவரிடம் இருக்கும் எனவும், ஹைபதுல்லாவின் அடுத்த கட்டதலைவர் ஒருவர் அதிபரை போல செயல்பட வாய்ப்புள்ளது எனவும் தாலிபன்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வஹீதுல்லா ஹாஷிமி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments