இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதியை தாலிபன்கள் நிறுத்தி விட்டதாக தகவல்

0 25751

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தாலிபன்கள் நிறுத்தி விட்டதால் இந்தியாவில் இருந்து எந்த பொருளும் ஆப்கனுக்கு தற்போது ஏற்றுமதியும் செய்யப்படவில்லை, இறக்குமதியும் செய்யப்படவில்லை என இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார்.

உலர்பழவகைகளில் 85 சதவிகிதம் ஆப்கனில் இருந்து இறக்குமதி ஆவதால், தாலிபன்களின் இந்த நடவடிக்கையால் அவற்றின் விலை இந்தியாவில் உயர வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டு இதுவரை சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்கனுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. ஆப்கனில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புக்கு இறக்குமதி நடந்துள்ளது. 22000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியா ஆப்கனில் முதலீடு செய்துள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments