ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டேன், பணம் ஏதும் எடுத்து வரவில்லை - அஷ்ரப் கனி

0 5664

தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், பணம் எடுத்து வரவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தனது முகநூலில் காணொளியை வெளியிட்டுள்ள அவர், தான் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க இருந்ததாகவும், ஆனால் தாலிபான்கள் தன்னைத் தேடுவதையறிந்த பின்னரே வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததே தற்போது மீண்டும் நடக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கனி, தான் பெட்டி பெட்டியாக பணத்தை எடுத்துச் சென்றதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments